Rock Fort Times
Online News

2-ம் கட்டமாக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் வங்கிகள் இயங்காது…!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிச் செயல்பாடு என்ற முறையை அமல்படுத்துவதில் நிலவும் தாமதம், செயல்திறன் சார்ந்த ஊக்கத் தொகைத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘ஐக்கிய வங்கி
சங்கங்கள் கூட்டமைப்பு’ (UFBU) கடந்த செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. செப்டம்பர் 12 மற்றும் 13-ந் தேதி, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 14-ந் தேதி, விநாயகர் சதுர்த்திக்காக விடுமுறை என வரிசையாக விடுமுறை நாட்கள் வந்ததால் வங்கி சேவையானது 4 நாட்கள் பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கான தீர்வு இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடரப் போவதாக தெரிவித்துள்ளன. இதனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. வார இறுதி நாட்களைத் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்காது. செப்டம்பர் 28-ம் தேதிக்கு முன்பாகவே வங்கி சார்ந்த பணிகளை முடித்துக்கொள்ளுமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்