Rock Fort Times
Online News

ஆட்சி மாறியதும் அரசு பேருந்தின் நிறமும் மாறியது…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி வகித்து வருகிறார். த.வெ.க. அரசு பொறுப்பேற்றதும், திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட அரசு பேருந்து கொள்முதல் டெண்டர் ரத்து செய்யப்பட்டன. அதற்கு பதிலாக புதிதாக ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார் இது ஒருபுறம் இருக்க சேலத்தில் 30 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பேருந்துகள் அனைத்தும் தமிழக வெற்றி கழகத்தின் சிவப்பு, மஞ்சள் கொடி வண்ணத்தில் காட்சியளிக்கின்றன. இந்தப் பேருந்துகள் ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு, ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களின் பெயர், பேருந்து வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், புதிய பேருந்துகளுக்கு தவெக கட்சியின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்