Rock Fort Times
Online News

திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் உள்ள கழிவறை திறக்கப்படுமா..?* பக்தர்கள் எதிர்பார்ப்பு (வீடியோ இணைப்பு) 

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில். மலைக்கோட்டையின் உச்சியில் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள தாயுமானவரை வழிபட்டால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என்பது ஐதீகம்.இதனால் ஏராளமான கர்ப்பிணிகளும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் விநாயகர்  சதுர்த்திக்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள சித்தி விநாயகர் கோவில் அருகில் கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையில் கடந்த 6 மாதமாக பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டன. அதற்கான பணிகள் முடிந்தும், இன்னும் திறக்கப்படவில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த கழிவறையே பிரதானமாக உள்ளது. இந்த கழிவறை இன்னும் திறக்கப்படாததால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, இந்த கழிவறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்