Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக என்.பொன்மணி ஐ.ஏ.எஸ் நியமனம்…!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அதன்படி, திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பு வகித்து வந்த, வீர் பிரதாப் சிங் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக என்.பொன்மணி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார். 2021 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழகத்தில் குடிமைப் பணியை துவங்கிய பொன்மணி, திருச்சி என்ஐடியில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தவர், ஏற்கனவே சேலம் மாவட்ட உதவி ஆட்சியராகவும், ஈரோடு வணிகவரித் துறையின் இணை ஆணையராகவும், சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராகவும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்