Rock Fort Times
Online News

2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு விருப்ப மனு அளிக்கலாம்…* இபிஎஸ்..!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா இவர்கள் அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். இதனால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்
செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட
விரும்பும் அதிமுகவினர் இன்று(08-09-2026) முதல் 3 நாட்களுக்கு விருப்ப மனு அளிக்கலாம். இன்று முதல் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதற்கான படிவத்தை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து செப்டம்பர் 10-ம்தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்