திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் சுட்டிக்காட்டி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இதற்கான இறுதி விசாரணையை வருகிற 28-ம் தேதி முதல் தொடங்குவதாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது. இறுதி விசாரணை நிறைவடையும் வரை இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.