Rock Fort Times
Online News

திருச்சி கோரையாற்றின் கரையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது…!

திருச்சி, பிராட்டியூர் அருகே உள்ள ரெட்டைமலை கோரையாறு கரையில், 9 அடி நீளமுள்ள முதலை ஒன்று அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சி மாவட்ட வனஅலுவலர் கிருத்திகா உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருச்சி மாவட்ட தீயணைப்புதுறையுடன் இணைந்து
கோரைஆற்றின் கரையில் சுற்றித்திரிந்த 9 அடி நீளமுள்ள முதலையை லாவகமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று கல்லணை ஆற்றங்கரையில் விடுவித்தனர். இதுபோன்று முதலைகள் ஏதேனும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டால், வனத்துறைக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்