Rock Fort Times
Online News

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல்…- இந்திய தேர்தல் ஆணையம்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) சத்யபாமா (தாராபுரம்). அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இவர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனால், இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. மேலும், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளை தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அந்தத் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல்
நடத்தப்பட மாட்டாது. அந்த ஐந்து தொகுதிகளை தவிர்த்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(07-09-2026) மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 9ம் தேதி – வேட்புமனு தொடக்கம்,
செப்டம்பர் 16ம் தேதி – வேட்புமனு கடைசி நாள்,
செப்டம்பர் 17ம் தேதி – வேட்புமனு பரிசீலனை,
அக்டோபர் 6ம் தேதி – வாக்குப்பதிவு,
அக்டோபர் 9ம் தேதி – வாக்கு எண்ணிக்கை.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்