தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் இன்று(07-09-2026) பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பதிலளித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் செய்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Comments are closed.