Rock Fort Times
Online News

தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநிலத்தலைவர் வி.ஜே.செந்தில் தலைமையில் திருச்சியில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ. உ. சிதம்பரனாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு தரப்பினர் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ. சிதம்பரனாரின் சிலைக்கு தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் வி.ஜே செந்தில் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் தென்னூர் உழவர் சந்தையில் இருந்து பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் பாடாலூர் மாணிக்கம், மாநில துணைத்தலைவர் பி.மகாலிங்கம், மாநில இளைஞரணி அமைப்பாளர் தங்கம் ரத்தினகுமார், திருச்சி மாநகர் மாவட்ட அமைப்பாளர் கே.திருநாவுக்கரசு, பிஆர்ஓ வ.உ.சி கண்ணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்