தமிழகத்தில் மழை இல்லாததால் மேட்டூர் அணை வறண்டு போனது. இதனால், கர்நாடகத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் தண்ணீர்
திறக்க ‘கறார்’ காட்டியதால் பல்வேறு சட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்தத் தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக மேட்டூர் அணையில் நிரம்பியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து விவசாய பணிகளுக்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் கடந்த ஒன்றாம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். தற்போது மேட்டூர் அணையின் நீர்வரத்து 92 அடியாக உள்ளதுடன், காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 7000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று(04-09-2026) காலை 6 மணிக்கு முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 1500 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்பு மேலணையிலிருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Comments are closed.