Rock Fort Times
Online News

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்…* தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய்..! 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி அரசின் தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பேசுகையில், தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, உயிரோடும் உணர்வோடும் கலந்தது என்றே கருதுகிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கப்பட வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்கள்  தமிழில் இருந்தால் மக்களுக்கு எளிதாக புரியும். மனுக்கள், வாதங்களுக்கு உரிய நடைமுறை வேண்டும். எனவே, தீர்ப்புகளை, உத்தரவுகளை தமிழில் வழங்கும் கட்டமைப்பு தேவை. நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் தமிழில் மொழிபெயர்க்க சட்டத் தமிழ் பயிற்சி தேவை. மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. அதனை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்திற்கு இணையான வாய்ப்பைத் தமிழ் மொழிக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்