Rock Fort Times
Online News

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு  குறித்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்…! 

திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஆசிரியர்-ஆசிரியரல்லா பணியாளர் சங்கம் மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து நடத்திய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு சிறப்பு நடைப்பயணம் இன்று (30.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கியது. இந்நடைப்பயணத்தை கல்லூரியின் செயலர் மற்றும்  தாளாளர் டாக்டர். அ. கா. காஜா நஜீமுதீன் மற்றும் பொருளாளர் எம். ஜே.ஜமால் முகமது ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் இர. ஜாஹிர் ஹுசைன் தலைமை தாங்கினார். இந்நடைப்பயணத்தில் உதவிச் செயலர் கே. அப்துஸ் சமது, நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் கா. ந. அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குநர் கா. ந. முகமது பாசில், கூடுதல் துணை முதல்வர்கள் எஸ். நாகூர் கனி, அ. ஜாபர் அஹமத், பணியாளர்கள் சங்க செயலாளர் எஸ்.முகமது இலியாஸ், விளையாட்டுத் துறை இயக்குநர் பி. எஸ். ஷாயின்ஷா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியிலிருந்து தொடங்கிய நடை பயணம் அண்ணா விளையாட்டு அரங்க சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 கி.மீ தூரம் மேற்கொண்டு கல்லூரி வளாகத்தை அடைந்தனர். நிறைவாக கல்லூரியின் பொருளாளர் பேசியபோது ‘மனிதர்கள் உடலளவிலும், மனதளவிலும் வலிமையானவர்களாக தங்களைத் தகவமைப்புச் செய்து கொள்ளவேண்டும்’ என்று கூறினார். கல்லூரியின் முதல்வர் பேசுகையில்,  புதிய சிந்தனை மலர்வதற்கு மனம் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியமாகும். மனம் ஆரோக்கியம் பெற உடல் நலம் பேணவேண்டும் என்று கூறினார்.

நிறைவாக பணியாளர் சங்க பொருளாளர் கே.சேக் ஃபரீத் நன்றி கூறினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்