Rock Fort Times
Online News

பேருந்து வசதி இல்லாததை கண்டித்து மணப்பாறை அருகே கல்லூரி மாணவ – மாணவிகள் மறியல்….!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்வதற்கு முறையான பேருந்து வசதி இல்லாததால் தினமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, கல்லூரி வரை பேருந்து இயக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தும்
இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி செய்து தரக்கோரியும், நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் சமத்துவபுரம் அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்