திமுக ஆட்சியில் கார் ரேஸுக்கு ரூ.24 கோடி செலவு பண்ணீங்களே?* அமைச்சர் செங்கோட்டையனுக்கு கே.என்.நேரு தக்க பதிலடி..!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் திட்டம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் தி.மு.க மற்றும் த.வெ.க உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சியான திமுகவிற்கு, த.வெ.க அமைச்சரும், அவை முன்னவருமான கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாக எழுந்து காட்டாக பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “நீங்கள் எத்தனை கோடியில் கார் ஓட்டினாலும், அரசு கார் கொடுக்கிற போது அதற்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், எங்களைப் பற்றி சொல்கிறீர்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் கார் பந்தயம் நடத்துவதற்காக ரூ.24 கோடி செலவிட்டார்களே, அது யார் அப்பா காசு?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு திமுக எதிர்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு காட்டமாக பதிலளித்துப் பேசினார். “செஸ், ஹாக்கி போட்டிகளைப் போலத்தான் பார்முலா கார் ரேஸ் போட்டியும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீங்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடி செலவில் போட்டிகளை நடத்தினீர்கள், ஆனால், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களைக் கூட வழங்கவில்லை, உங்களைப் போலவா நாங்கள் இருக்க முடியும்?” என்று கே.என்.நேரு காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

Comments are closed.