நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் பல குழுக்களாகச் சென்றுள்ள நிலையில், அவர்களின் நிலை என்ன?, வெள்ளத்தில் சிக்கியுள்ள ஈஷா யாத்ரீகர்களின் நிலை குறித்துச் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளிக்கையில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. அங்குள்ள 34 தமிழர்களின் விவரங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

Comments are closed.