Rock Fort Times
Online News

3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?- சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!

தமிழக சட்டப்பேரவை இன்று(25-08-2026) காலை 9-30 மணிக்கு தொடங்கியது. பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக அறிக்கை வந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா? 3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன? 3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் என்று பேசினார். அதற்கு சபாநாயகர், இதுகுறித்து வனத்துறை, சட்டத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டனர் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தவுடன் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்