Rock Fort Times
Online News

கதிர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: திருச்சி, சாலை ரோட்டில் கோலாகல திறப்பு விழா..!

திருச்சி சாலை ரோட்டில் இயங்கி வரும் கதிர் மருத்துவமனையின் புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் இன்று(23-08-2026) திறக்கப்பட்டது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான ஆர்.பரத்குமார் – மருத்துவர் கதிரொளி தம்பதியரின் மகள் அவனிதா பரத்குமார் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை எம்.எஸ் ராஜேந்திரன், வைஜெயந்திமாலா, ஜே.வீரபாண்டியன், டி.லலிதா ஆகியோர் வரவேற்றனர். தரை தளத்தோடு சேர்த்து மொத்தம் ஐந்து மாடிகளை கொண்ட இம்மமருத்துவமனையில் 24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சைபிரிவு, 13 படுக்கைகள் கொண்ட உலக தரத்திலான அவசர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் பிரிவு, நவீன மயமாக்கப்பட்ட மகப்பேறு மருத்துவப் பிரிவு, 3டி மாடுலர் ஆபரேஷன் தியேட்டர், எண்டோஸ்கோபி பிரிவு, ஐசிஜி டெக்னாலஜியுடன் இயங்கும் 3டி லேப், நவீனமயமாக்கப்பட்ட இன்டர்வென்ஷனல் கேத் லேப் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில்,தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கதிர் மருத்துவமனையின் மேனேஜர்கள் எம்.சூர்யா, என்.பி.தேவதாஸ்,ஆர். ரமேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்