Rock Fort Times
Online News

திமுக மாவட்டச் செயலாளர்கள் 13 பேரின் கட்சி பதவி பறிப்பா?* பரபரப்பு தகவல்கள் !

2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட விஜய், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து முதல்வராக அரியணை ஏறினார். திமுகவுக்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக் குழு கொடுத்த அறிக்கையின்படி திமுகவில் சிலர் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களின் வயது வரம்பு 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திமுகவில் தற்போது 70 வயதை தாண்டிய மாவட்ட செயலாளர்கள் என்று எடுத்துக் கொண்டால்

*காஞ்சிபுரம் தெற்கு – சுந்தர் – (வயது 72)

* ராணிப்பேட்டை – ஆர் காந்தி -( 80)

* திருவண்ணாமலை தெற்கு – எ.வ.வேலு – (75)

* விழுப்புரம் வடக்கு – செஞ்சி மஸ்தான் – (71)

* தஞ்சாவூர் வடக்கு – சாக்கோட்டை அன்பழகன் ( 72)

* புதுக்கோட்டை தெற்கு – ரகுபதி – (76)

* சேலம் கிழக்கு – எஸ்.ஆர். சிவலிங்கம் -( 75)

* ஈரோடு தெற்கு – முத்துசாமி -( 77)

* மதுரை மாநகர் – தளபதி – (70)

* தேனி தெற்கு – ராமகிருஷ்ணன் – (77)

* விருதுநகர் கேகே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் – (77)

* தூத்துக்குடி தெற்கு – அனிதா ராதாகிருஷ்ணன் – ( 74)

* திருநெல்வேலி மேற்கு ஆவுடையப்பன் – (81)

ஆகிய 13 பேர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றும், அவர்களுக்கு மாநில அளவில் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்