Rock Fort Times
Online News

ஓணம் பண்டிகை: விமான கட்டணத்தை கேட்டு பயணிகள் ‘ஷாக்’…!

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளும் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தப் பண்டிகை வருகிற 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பணி நிமித்தமாகவும், படிப்பு காரணமாகவும் கேரளத்திலிருந்து தமிழகத்தில் தங்கி உள்ளவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.அதில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிலர் விமானங்களை நாடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ5,336 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ14,843 ஆகவும், திருவனந்தபுரத்திற்கு ரூ5,853 ஆக இருந்த கட்டணம், ரூ14,700 ஆகவும், கோழிக்கோடு வுக்கு ரூ6,158 ஆக இருந்த கட்டணம் ரூ17,678 ஆகவும், கண்ணூருக்கு ரூ5,655 ஆக இருந்த கட்டணம், ரூ12,270 ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கேட்டு பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழியின்றி அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்