முந்தைய ஆட்சியின் ஊழல் பட்டியல் என் டேபிளில் தான் இருக்கு… ஓபன் பண்ண வச்சிடாதீங்க…* முதல்வர் விஜய்..!
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய (19-08-2026) கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய
துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில்களை அளித்தார். இதற்கிடையில் திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு சட்டென்று எழுந்து முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்தார். இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதாரம்… ஆதாரம் என்று கேட்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நிதி அமைச்சர் பேசும்போது 3 துறைகள் குறித்து ஆய்வு செய்த கோப்புகள் எனது மேஜையில் இருப்பதாக தெரிவித்தார். அதை ஒன்றும் அவர், போற போக்கில் சொல்லவில்லை. உண்மையிலேயே அந்த கோப்புகள் எனது மேஜையில் தான் இருக்கிறது. அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கிறது. ஓபன் பண்ண வைத்து விடாதீர்கள். எதை எப்போது ஓபன் பண்ண வேண்டுமோ அப்போ கரெக்டா ஓபன் ஆகும். மக்களிடம் எப்போது பேச வேண்டும், எண்ண பேசணும், எப்படி பேசணும் என்பது எனக்குத் தெரியும். இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல… இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.