இந்திய திரு நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியினை மேயர் மு.அன்பழகன் ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மாநகராட்சி அலுவலர்களின் குழந்தைகள் (தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்) உள்ளிட்டவர்களுக்கு ரொக்கத்தினையும் வழங்கி பாராட்டினார். விழாவில்விழாவில் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் வீர்பிரதாப் சிங் மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.