திருச்சி மாநகராட்சி சார்பில், திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று(10-08-2026) மேயர் மு.அன்பழகன், தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர், தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கினார். இந்த கூட்ட நிகழ்வில், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி , துணை ஆணையர் அஜித்தா பர்வின், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, பி. ஜெய நிர்மலா , நகரப் பொறியாளர் அண்ணாதுரை மற்றும் செயற் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.