Rock Fort Times
Online News

திருச்சியில் நிலவும் வெப்பத்தை குறைக்க மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்…!

திருச்சி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் கோட்டம், வார்டு எண் 6, திருவானைக்காவலில் அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் 10
ஆயிரம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார். இதில் 26 வகையான நிழல்தரும் மரக்கன்றுகள், பூக்கும் மரக்கன்றுகள், பழம்தரும் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அண்ணாதுரை, உதவி ஆணையர் சீனிவாசன். உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம், முன்னாள் உதவி ஆணையர் வைத்தியநாதன் , சுகாதார அலுவலர் வினோத் கண்ணா , இளநிலை பொறியாளர் மதன்குமார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள், அப்பகுதி குடியிருப்பு சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.

இந்தத் திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் கூறுகையில், திருச்சி மாநகரில் நிலவும் வெப்பத்தைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும் ஜப்பானிய மியாவாகி முறையில் அடர்ந்த குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநகரின் ஐந்து மண்டலங்களில் உள்ள பூங்காக்கள், சாலையோர பகுதிகள், ஆற்றங்கரை பகுதிகள், மாநகராட்சி பொது இடங்கள் மற்றும் பல பகுதிகளில் இந்த அடர்வன காடுகள் உருவாக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்