தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மூலம் ‘தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ எனப்படும் டாஸ்மாக் தமிழகம் முழுவதும் சில்லரை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் செயல்படுகின்றன. நாள்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் இருக்கிறது. வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும். கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம்தான் மதுபான சில்லறை விற்பனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனையை கைவிட்டு மீண்டும் தனியார் கைகளுக்கு கொடுக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த சட்ட திருத்தம் விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. முதற்கட்டமாக நகர்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, படிப்படியாக முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு
திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மதுபான விற்பனையில் ரெஸ்டோ பார், தனியார்மயம் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று அண்மையில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.