Rock Fort Times
Online News

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் எண்ணிக்கையில் ராகுல் காந்தியை முந்திய முதல்வர் விஜய்…! 

ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராம் தளத்தைப் பொறுத்தவரை, 10.2 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டு உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சர்கள் வரிசையில், அமித் ஷா (3.22 கோடி), நிதின் கட்கரி (66 லட்சம்) உள்ளிட்டோர் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் பின்னுக்குத் தள்ளி (1.47 கோடி), தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 1.87 கோடி ஃபாலோயர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர்களையடுத்து, அசாதுதீன் ஒவைசி (1.25 கோடி), கேஜ்ரிவால் (40 லட்சம்), பிரியங்கா (40 லட்சம்), மு.க. ஸ்டாலின் (23 லட்சம்) உள்ளிட்டோர் உள்ளனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்