உண்டியல் திருட்டு விவகாரம்: கோவை கோனியம்மன் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்… * அமைச்சர் ரமேஷ் உத்தரவு!
கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது ஒரு உண்டியலை அங்குள்ள ஊழியர்கள் திருடியுள்ளனர். பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோனியம்மன் கோவிலில் வேலை செய்து வந்த ஊழியர்கள் பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரும் அதை கண்டுபிடிக்காமல் உடந்தையாக இருந்த அதிகாரிகள் ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி என இவர்கள் 4 பேரையும் சேர்த்து மொத்தமாக 8 பேரை அமைச்சர் ரமேஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.