Rock Fort Times
Online News

‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு மரக்கன்றுகள்- இனிப்பு…* திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்..! 

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழகம் முழுவதும் ஜூலை 23ம் தேதி வெளியிடப்பட்டது. திருச்சி சோனா, மீனா திரையரங்கிலும் திரையிடப்பட்டது. விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் ரசிகர்களுக்கு 500 மரக்கன்றுகளும், துணிப்பையுடன் இனிப்புகளும் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஆர்கே ராஜா தலைமை தாங்கி ரசிகர்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டிவிஎஸ் டோல்கேட் நந்தகுமார், அக்பர் அலி, திரைப்பட நடிகர் கெட்டப் ராஜேந்திரன், சரண்ராஜ், மணப்பாறை நடேஷ் குமார், தொட்டியம் பாரதிராஜா, ஹரிஹரன், கார்த்திக், சமயபுரம் சதீஷ்குமார், மண்ணச்சநல்லூர் சுரேஷ்குமார், மஞ்சதிடல் சிவா, அரியமங்கலம் ஆசிப், சந்துக்கடை தனசேகர், கோகுல், தீபக் ,டேவிட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்