Rock Fort Times
Online News

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர் அசிம் குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து, ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் ரயில் நிலையத்தை நோக்கி ஹைட்ரஜன் ரயில் புறப்பட்டது. ரயிலில் பள்ளி மாணவர்கள் பலரும் பயணித்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று ஹரியானாவும், ஜிந்த் பகுதியும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. இங்கிருந்து முதல் ஹைட்ரஜன் ரயிலை நாடு பெற்றுள்ளது என்று கூறினார்.

சென்னையில் தயாரான பெட்டிகள்,

இந்தியாவில் ஹைட்​ரஜன் எரிபொருளில் இயங்​கும் வகையி​லான ரயில் இன்​ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு முயற்​சிகள் தொடங்​கின. ரூ.136 கோடி மதிப்​பீட்​டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்​டத்தை 2022 ஏப்​ரலில் தொடங்​கியது. இத்திட்​டத்​துக்​கான டெண்​டர் ஹைத​ரா​பாத்​தை சேர்ந்த மேதா நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டது. இந் நிறுவனம்​தான் எரிபொருட்களை சப்ளை செய்​கிறது. ஹைட்​ரஜன் ரயிலை வடிவமைக்​கும் பணி​கள் சென்னை பெரம்​பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்​சாலை​யில் (ஐசிஎஃப்) நடை​பெற்​றன. பணி​கள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்​டங்​களும் நடை​பெற்​றன.

இதையடுத்​து, ரயிலை அறி​முகப்​படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது. இந்​நிலை​யில், நாட்டின் முதலாவது ஹைட்​ரஜன் ரயி​லை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெர்​மனி​யில் முதன்​முதலாக உலகின் முதல் ஹைட்​ரஜன் பயணி​கள் ரயில் 2018-ம் ஆண்​டில் இயக்​கப்​பட்​டது. பின்னர் ஜப்​பான், சீனா, அமெரிக்கா தங்​கள் நாடு​களில் தயாரிக்​கப்​பட்ட ஹைட்​ரஜன் ரயிலை இயக்கின என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்