நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து எம்.பி.க்களுக்கும் மக்களவை செயலகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஸ்மாா்ட் வாட்ச் உள்ளிட்ட நவீன சாதனங்கள், எம்.பி.க்களின் தனிநபா் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை அணிந்து வர வேண்டாம். நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, நுழைவு வாயில் கேட்டுகள் முன்பு போராட்டம் நடத்த வேண்டாம். உண்ணாவிரதம் போன்றவற்றிலும் எம்.பி.க்கள் ஈடுபட வேண்டாம். மேலும், பேனா்கள், கத்திகள், வாள், கம்பு, வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றையும் நாடாளுமன்ற வளாகத்துக்கு எம்.பி.க்கள் எடுத்து வரக்கூடாது என மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Comments are closed.