காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா…!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, காட்டூரில் அமைந்துள்ள மாண்ட்போர்ட் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச கல்வியை அறிமுகப்படுத்தியதற்கும், இலவச மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கும் கல்வித்தந்தை காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி இயக்குனர் மற்றும் தமிழ் துறை இணை பேராசிரியர் அ. சையத் ஜாகிர் ஹாசன் கலந்துகொண்டு கல்வித்தந்தை காமராஜரின் எளிமை, நேர்மை, தொலைநோக்கு பார்வை மற்றும் அவரது ஆட்சி காலத்தில் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஆ.ராபர்ட், கல்வித்தந்தை காமராஜர் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி அவரது கல்வி கனவை நனவாக்கும் வகையில் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் கல்வியில் சிறந்த விளங்க வேண்டும் என வலியுறுத்தினார். மாணவர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

Comments are closed.