Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்…!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் லஞ்சத்தை ஒழிப்பதில் அதிதீவிரம் காட்டி வருகிறார். அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது, எனது பெயரை சொல்லுங்கள் என்று கரூரில் அண்மையில் பேசினார். அதேபோல யாராவது லஞ்சம் கேட்டால் அது தொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ்ப் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் அவரது கட்சி நிர்வாகி ஒருவரே லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா என்கிற வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட காரணத்தால் வீரா என்கிற வீராசாமி தான் வகிக்கும் பொறுப்பு உட்பட அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்