விமானப் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், மாத தவணை (EMI) முறையில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதியை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், விமான டிக்கெட் கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்த வேண்டிய அவசியமின்றி, 3 முதல் 36 மாதங்கள் வரை தவணை முறையில் செலுத்தும் வசதி பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சேவை தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள எமிரேட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இதன்மூலம் பயணச் செலவின் நிதிச் சுமையை குறைத்து, பயணத் திட்டங்களை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதி, சர்வதேச விமானப் பயணிகளை அதிகம் கவரும் முயற்சியாகவும், பயணிகளுக்கு நெகிழ்வான கட்டண முறையை வழங்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

Comments are closed.