Rock Fort Times
Online News

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்…! துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு..!

ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 13) பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் அலுவலக கூட்ட அரங்கில்
நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி,
மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, பி.ஜெய நிர்மலா , ஜெயலட்சுமி கண்ணன், நகர்நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்