Rock Fort Times
Online News

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை: முதல்வர் விஜய்…!

வியட்நாமில் தீவுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் இருந்த தமிழர்கள் உள்பட இந்திய சுற்றுலாப் பயணிகளில் 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு முதல்வர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளோர். மேலும், உயிரிழந்த தமிழர்களின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்