திருச்சி ஜங்ஷனில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருச்சி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16834) இன்று (11-07-2026) மற்றும் 12,13-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவெறும்பூரில் இருந்து மாலை 4.28 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். இந்த ரெயில் திருச்சி தஞ்சாவூர் இடையே பகுதியாக இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.