அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர் .அந்த வகையில் இன்று(02-07-2026)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் உட்பட சுமார்
15 ஆயிரம் பேர் த.வெ.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தவெக துண்டு அணிவித்து வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,
- சி.விஜயபாஸ்கர் (விராலிமலை)
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்)
- வளர்மதி (திருச்சி)
- எம்.எஸ்.எம். ஆனந்தன் (திருப்பூர்)
முன்னாள் எம்எல்ஏக்கள்,
- மான்ராஜு (ஸ்ரீவில்லிபுத்தூர்)
- எம்.ராம்குமார் (கும்பகோணம்)
- ராஜவர்மன் (திருச்சுழி)
- சதன்பிரபாகர் (பரமக்குடி)
- திருஞானசம்பந்தம் (பேராவூரணி)
மாவட்ட செயலாளர்கள்,
- பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை)
- இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர்)
- ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை),
- ஜெ சீனிவாசன் (திருச்சி மாநகர்)
உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காக கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பஸ்கள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.