Rock Fort Times
Online News

நீதிபதி உதவியாளர் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டு,  விதிகளைப் பின்பற்றி மீண்டும் தேர்வு நடத்தவும் மேலும், திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டும், சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால், நேரடி தேர்வு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றாமல் நியமனம் மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்