Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? திருமாவளவன் ‘பளிச்’ பதில் …!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது ஆரோக்கியமானதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எந்த பின்னணியில் இதனைச் செய்கிறார்கள் எனத் தெரியாது. அதிமுக உள்கட்சி விவகாரமாகவும் இதனைக் கடந்து செல்ல முடியவில்லை. தமிழகத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். இதனை முன்பே தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஊடகங்கள் தான் இதுபோன்ற செய்திகளைப் பரப்புகின்றன. தவெகவுக்கு நாங்கள் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவில்லை. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. என்எல்சி பங்குகளை விற்கும் முயற்சியை முதலில் கைவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மெல்ல மெல்ல தனியார் மயத்தை ஆதரிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்