நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் காங்கிரஸ் இணைந்து பயணிக்க வேண்டும் என்று கருத்து கூறியவர். ராகுல்காந்தியும் அதனையே விரும்பினார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செல்வப் பெருந்தகை, திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டார். இதனால், 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் செல்வப் பெருந்தகை மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் இருந்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. எதிர்பார்த்தபடியே செல்வப் பெருந்தகை மாற்றப்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

Comments are closed.