திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்… * 3 கி.மீ.தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி ஓயாமரி அருகே உள்ள பழைய காவிரி பாலம் ஜூன் 25 முதல் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. இதனால் மாற்றுப்பாதைகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், தினமும் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மாற்று வழிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஒருபுறமிருக்க, அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையான சுரங்கப்பாதையை அமைத்துத் தரக்கோரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று(27-06-2026) பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இதனால் எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மறியல் காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

Comments are closed.