தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று(26-06-2026) வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். தற்காலிக பதவியான இப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளும் நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கு வகிப்பார். இப்பணி நியமனத்துக்கான நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.