தமிழ்நாட்டில் உள்ள ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளிலும் திடக்கழிவுகளை சேகரித்தல் மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பான விரிவான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிப்பதற்கும்,
அப்பணிகளுக்கான சேவைகளை வழங்கவும், தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் அரசு சார்பில் கோரப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பானது, தமிழக அரசின் திட்ட மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் கடந்த ஜூன் 20ம் தேதி விளம்பரமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தூய்மை பணியினை தனியார் மயமாக்கக்கூடாது, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கு தவெக ஆதரவு கட்சிகளாக கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கைகளை ஏற்று, தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Comments are closed.