Rock Fort Times
Online News

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…* நவீன கருவிகளுடன் சோதனை!

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று(26-06-2026) மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் வந்தது. அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகம் முழுவதும்
அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருந்தாலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மொகரம் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் அதிகாரிகள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்