Rock Fort Times
Online News

திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..! * மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார்..!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் இன்று (ஜூன் 25) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த பேரணியை நடத்தின. மத்திய பேருந்து நிலையம், வெஸ்ட்ரி பள்ளி அருகே
இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெரியார் சிலை வழியாக சென்ற பேரணி, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்