திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழா…பாரதிதாசன் பல்கலைக்கழக திட்ட இயக்குனர் கோபிநாத் கணபதி பங்கேற்பு !
திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியில் தனிச்சிறப்புமிக்க 21-வது கல்வி ஆண்டிற்கான (2026-27) மாணவர் மற்றும் மாணவியர் தலைவர்கள் பதவியேற்பு விழா கடந்த 19-ம் தேதி அன்று சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் திட்ட இயக்குநரும், மூத்த பேராசிரியருமான கோபிநாத் கணபதி தலைமை தாங்கினார். மாணவர்களின் தலைவராக எம்.மெளலிஷ் தேவ் மற்றும் மாணவிகளின் தலைவியாக எஸ்.மேச்சலின் மேரியோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்பள்ளியின் மாணவர்கள், மாண்ட்போர்ட், போஸ்கோ, கபிரியேல் என மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மூவணித் தலைவர்களும், துணை தலைவர்களும், இலக்கியம் மற்றும் விவாத மன்றத்தின் தலைவர்களாக எஸ்.ஆர்.ஸ்ரீசஞ்சய் மற்றும் பி.ஓவியா, பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

விழாவில், சிறப்பு விருந்தினர் கோபிநாத் கணபதி, புதிதாக பதவியேற்றுள்ள மாணவர்களின் தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு கல்வித் துறையில் முன்னணியில் திகழ்ந்து, மாணவர்களை உலகளாவிய தலைவர்களாக உருவாக்கும் மாண்ட்போர்ட் பள்ளியை பெரிதும் பாராட்டினார். மேலும், மாணவர்கள் தங்கள் கல்வியில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் அதே சமயத்தில் மற்ற கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளிலும் பங்குபெற்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட், பள்ளியின் தொடர்ச்சியான வெற்றிக்கு பெரிதும் தங்களை அர்ப்பணித்த ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை
பாராட்டி பேசினார்.


Comments are closed.