Rock Fort Times
Online News

திருச்சி காட்டூர், மாண்ட்போர்ட் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி…!

சர்வதேச யோகா தினத்தினையொட்டி, ஜூன் 21-ம் தேதி திருச்சி காட்டூர், மாண்ட்போர்ட் பள்ளியின் தேசிய மாணவர் படையினர் மற்றும் தேசிய சாரண இயக்கத்தினர் யோகாப்பயிற்சியை மேற்கொண்டனர். இவ்வாண்டின் உலகளாவிய கருப்பொருளான *நலன், ஞானம் மற்றும் உலக அமைதிக்கான யோகா” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 52 என்.சி.சி. மாணவர் படையினர், 125 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு மாண்ட்போர்ட் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் தலைமை தாங்கியதோடு யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினார். சூரிய நமஸ்கார், பிரணாயாமம், தியானம் உள்ளிட்ட யோகாப் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொண்டு சுவாசன பயிற்சியுடன் நிறைவு செய்தனர். இந்த நிகழ்வு சர்வதேச யோகா தின உறுதிமொழியுடன் நிறைவடைந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்