சொன்னதை செய்த முதல்வர் விஜய்: பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ரூ.756 கோடி ஒதுக்கீடு…!
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” செயல்படுத்தப்படும், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது த.வெ.க. ஆட்சியைப் பிடித்துள்ளதால் தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தில், தங்க மோதிரம் திட்டம் மற்றும் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல் “தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்” நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்திருந்தாலும், வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் குடும்பங்களின் மகிழ்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம், தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments are closed.