முதல்வர் விஜய் பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு…!
தமிழக வெற்றி கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அன்னதான நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் ஆகியவற்றை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி, முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட த.வெ.க பிரமுகருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் கட்சியினர் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் விஜய் நீடூழி வாழவும், அவரின் மக்கள் பணிகள் சிறக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் எம்.செந்தில் முன்னிலை வகித்தார். உறையூர் பகுதி செயலாளர் கண்ணன், நிர்வாகி உய்யகொண்டான் கார்த்திகேயன், முஸ்தபா, ரவிச்சந்திரன், அழகரசன், விஜய், வழக்கறிஞர் புவனேஸ்வரி, எஸ்.பி.கார்த்திகேயன், வரகனேரி சரவணன், எடத்தெரு சந்திரன், ராஜா, முஹம்மது, ஆட்டோ ரவி, சந்துக்கடை சந்துரு, பிரதீப் மற்றும் த.வெ.க பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர், முக்கிய பிரமுகர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெல்லமண்டி என்.ஜவஹர்லால் நேரு சிறப்பாக செய்திருந்தார்.

Comments are closed.