Rock Fort Times
Online News

திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…! 

பாஜக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளரான அலிஷா அப்துல்லா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றியும், தனது குழந்தைகள் பற்றியும் யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இம்மாத தொடக்கத்தில் திருச்சி சூர்யாவை சென்னை மாநகர போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்தாரை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக, இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில், சூர்யா திருச்சி திமுக எம்பி சிவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்